பதவி துறக்கிறார் பிஹார் மாநில முதல்வர்!
பிஹார் Bihar மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் Nitish Kumar விரைவில் பதவி துறக்க உள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
மாநிலங்களவை Rajya Sabha தேர்தலில் போட்டியிடும் நோக்கிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் பிஹாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 2 இடங்களில் வெற்றி பெறும் சாத்தியம் பிரகாசமாக உள்ளது.
இதில் ஒரு தொகுதியில் மத்திய அமைச்சர் ராம்நாத் தாக்கூர் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. மற்றைய தொகுதியிலேயே நிதிஷ் குமார் போட்டியிடுவார் எனக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் நிதிஷ் குமார் முதல்வர் பதவியிலிருந்து விலகவுள்ளார்.
அவரது மகன் நிஷாந்த் குமார் துணை முதல்வராகப் பொறுப்பேற்பார் எனவும் பா.ஜ.கவை சேர்ந்த ஒருவர் அடுத்த முதல்வராக பதவியேற்பார் எனவும் தெரியவருகின்றது.
இது தொடர்பில் பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தள உயர்மட்ட தலைவர்கள் மத்தியில் கலந்துரையாடல் இடம்பெற்றுவருகின்றது.





