ஈரானின் அடுத்த உச்சத் தலைவர்தான் எங்கள் இலக்கு : இஸ்ரேல் சபதம்!
ஈரான் நாட்டின் அடுத்த உச்ச தலைவராக யாரைத் தேர்வு செய்கிறாரோ, அவர் “அழிக்கப்பட வேண்டிய இலக்காக” இருப்பார் என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இஸ்ரேலை அழிக்கவும், அமெரிக்காவையும் சுதந்திர உலகத்தையும் பிராந்திய நாடுகளையும் அச்சுறுத்தவும், ஈரானிய மக்களை அடக்கவும் ஈரானிய பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு தலைவரும் ஒழிக்கப்பட வேண்டிய இலக்காக இருப்பார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
புதிய உச்ச தலைவரைத் தேர்ந்தெடுக்கும் ஈரானின் நிபுணர்கள் சபையுடன் தொடர்புடைய ஒரு கட்டிடத்தை இஸ்ரேல் நேற்று தாக்கிய நிலையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.





