இலங்கை செய்தி

TIN கட்டாயமாக்கப்பட்டது

இலங்கையில் பல்வேறு சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வரிச் செலுத்தும் அடையாள இலக்கம் (TIN சான்றிதழ்) சமர்ப்பிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தற்போது  மூலம் வெளியிடப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன்படி, ஏதேனும்  நிதி நிறுவனமொன்றில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தல், கட்டிட வரைபடங்களுக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளுதல் போன்ற சேவைகளுக்கு TIN சான்றிதழ் சமர்ப்பிப்பது அவசியமாகும்

அத்துடன் மோட்டார் வாகனப் பதிவு மற்றும் வாகன அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பித்தல், காணி அல்லது காணி உரிமத்தைப் பதிவு செய்தல் மற்றும் வணிகப் பதிவுகளை மேற்கொள்ளுதல் போன்ற சேவைகளுக்கு குறித்த சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேலும் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகளைப் பரிமாற்றுதல், கடன் அட்டைகளை பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட சேவைகளுக்கு வரிச் செலுத்தும் அடையாள இலக்கம் கட்டாயம் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!