உலகம்

பொலிவியாவில் விமான விபத்து : 15 பேர் பலி!! தெருவெங்கும் பணமழை!

பொலிவியாவின்  (Bolivia) தலைநகர் அருகே நேற்று சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் நெடுஞ்சாலையில் பயணித்த ஏராளமான வாகனங்கள் சேதமடைந்ததுடன், குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொலிவியாவின் தலைநகர் லா பாஸில் உள்ள விமான நிலையத்திற்கு அருகிலுள்ள நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் மேற்படி வாகனத்தில் பயணித்தவர்களா என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.

அதேநேரம் பொலிவிய விமானப்படைக்குச் சொந்தமான ஹெர்குலஸ் என்ற விமானம்  மத்திய வங்கியிலிருந்து பிற நகரங்களுக்கு புதிய ரூபாய் நோட்டுகளை கொண்டு சென்றபோது  விபத்தில் சிக்கியுள்ளது.

விமான நிலையத்திற்கு வெளியே ஏராளமான பணம் சிதறிக்கிடந்த நிலையில்,   நூற்றுக்கணக்கான மக்கள் சிதறிய பணத்தை சேகரிக்க விரைந்தனர்.

இந்நிலையில் கூட்டத்தைக் கலைக்க பொலிஸார் கலவரத் தடுப்பு உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டியிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த விபத்தை தொடர்ந்து முனையத்திற்குச் செல்லும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களையும் அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!