இலங்கை செய்தி

நிதி முகாமைத்துவத்தில் வடக்கு மாகாணத்தின் வரலாற்றுப் பதிப்பு

இலங்கையின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில், 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட நிதியை மிக வினைத்திறனாகப் பயன்படுத்தியதில் வடக்கு மாகாண சபை முதலிடத்தைப் பெற்றுள்ளது.

ஒதுக்கப்பட்ட நிதியில் 98 சதவீதத்துக்கும் அதிகமான நிதியைச் செலவு செய்து, பௌதீக ரீதியில் 100 சதவீத இலக்கை எட்டியுள்ளதாக மாகாணப் பிரதிப் பிரதம செயலாளர் ஆர்.சிவரூபன் தெரிவித்துள்ளார்.

இன்று (ஜனவரி 1, 2026) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற புத்தாண்டு கடமை ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் நா.வேதநாயகன், 2026ஆம் ஆண்டுக்காக வடக்கு மாகாணத்திற்கு அண்ணளவாக 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

கடந்த 2025ஆம் ஆண்டு 8 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இம்முறை கூடுதல் நிதி கிடைத்துள்ளது.

மாகாணத் திட்டங்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நேரடிப் பணிப்புரையின் கீழ் மத்திய அரசின் நிரல் அமைச்சுக்களிடமிருந்தும் நிதி பெற வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.

மேலும், மாகாணத்தில் தொடர்ச்சியாக வெள்ளப் பாதிப்புகளை எதிர்கொள்ளும் பிரதேசங்களைக் கண்டறிந்து, அவற்றுக்கு நிரந்தரத் தீர்வை எட்ட இவ்வாண்டில் விசேட கவனம் செலுத்தப்படும் என ஆளுநர் உறுதியளித்தார்.

வெறும் நிதிப் புள்ளிவிவரங்களை மட்டும் பார்க்காமல், இத்திட்டங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது குறித்து விரிவான ஆய்வுகள் நடத்தப்படும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Puvan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!