உலகம் ஐரோப்பா செய்தி

லண்டன் கிறிஸ்துமஸ் தினக் கொலை: அந்தோணி கில்ஹீனி குற்றவாளி எனத் தீர்ப்பு

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று லண்டனின் வெஸ்ட் எண்ட் (West End) பகுதியில் மதுபோதையில் வாகனத்தைச் செலுத்தி, ஒருவரைக் கொலை செய்தும் மேலும் பலரைக் காயப்படுத்திய நபர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2024 டிசம்பர் 25 ஆம் திகதி அதிகாலையில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், 25 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் நால்வர் பலத்த காயமடைந்தனர்.

இது தொடர்பில் மெற்றோபொலிட்டன் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, 31 வயதான அந்தோணி கில்ஹீனி (Anthony Kilheeny) என்பவர் கைது செய்யப்பட்டார்.

அந்தோணி கில்ஹீனி வேண்டுமென்றே தனது வாகனத்தைப் பயன்படுத்தி இந்த வன்முறைத் தாக்குதலை நடத்தியதாக அரச தரப்பு சட்டத்தரணிகள் (CPS) நீதிமன்றத்தில் நிரூபித்தனர்.

லண்டன் மத்திய குற்றவியல் நீதிமன்றமான ஓல்ட் பெய்லியில் (Old Bailey) நடைபெற்ற இந்த விசாரணையின் முடிவில், அவர் மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றச்சாட்டு, இரண்டு கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் மற்றும் உடல் ரீதியான கடுமையான தீங்கு விளைவித்தமை ஆகிய அனைத்துக் குற்றச்சாட்டுகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!