ஐரோப்பா

பிரித்தானியாவில் கடும் சிக்கலில் உள்ள தேசிய சுகாதார சேவை – ஆபத்தில் நோயாளிகள்!

பிரித்தானியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு அமெரிக்கா கூடுதல் வரிகளை விதித்துள்ளது.

இந்நிலையில் பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை (NHS) மருந்துகளை பெற்றுக்கொள்ள 25 சதவீதம் அதிகளவில் செலவழிக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. இது வரவு செலவு திட்டத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும்  எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் தேசிய சுகாதார சேவையின் உதவிகளை பெற காத்திருக்கும் நோயாளிகள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள் என முன்னணி சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த சூழ்நிலையை கையாள பிரித்தானிய அதிகாரிகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே தேசிய சுகாதார சேவை அதிகாரிகள் முக்கிய மருந்துகளுக்காக பில்லியன் கணக்கான பவுண்டுகளை அதிகமாக செலவிடவுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்