நடுவானில் ஏற்பட்ட கொந்தளிப்பு : விமானம் குழுங்கியதால் பதற்றம்!
ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நடுவானில் கொந்தளிப்பில் சிக்கியதால் தனது பயணத்தை மாற்றியமைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது குழந்தைகள் உள்பட 200இற்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்ததாக கூறப்படுகிறது.
ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ் விமானம் வியாழனன்று ஸ்டாக்ஹோமில் இருந்து புளோரிடாவின் மியாமிக்கு புறப்பட்டு சென்றுக் கொண்டிருந்தபோது இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளது.
விரைந்த செயற்பட்ட விமானிகள் நிலைமையை சமாளிப்பதற்காக கனேடிய எல்லையில் தரையிறக்கியுள்ளனர்.
விமானத்தில் தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளதா என்று சோதிக்கப்பட வேண்டும் என்றும், மியாமியில் அதற்கான சரியான உபகரணங்கள் இல்லை என்றும், அதற்கு பதிலாக விமானி திரும்பி, நிறுவனத்தின் தலைமையகமான கோபன்ஹேகனுக்குச் செல்ல வேண்டும் என்றும் விமான நிறுவனம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏறக்குறைய 09 மணிநேர பயணத்தை தொடர்ந்து பயணிகள் கோபன்கேஹனில் தரையிறங்கியுள்ளனர். அங்கு அவர்களுக்கு ஹோட்டல் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.