இலங்கை அரசியலில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதி அநுர
நாடதளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஆளும் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி அசைக்க முடியாத முன்னிலை பெற்றுள்ளது.
வெளியான முடிவுகளுக்கமைய, தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் ஆட்சி அதிகாரத்தை இலகுவாக பெற்றுள்ளது.
நாடாளுமன்றத்தில் 2/3 என்ற பெரும்பான்மையை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது.
விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் ஒரு தனிக் கட்சி இதைப் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
செப்டம்பரில் தேர்ந்தெடுக்கப்பட்ட அநுர குமார திசாநாயக்க, நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் தனது வாக்குறுதியை நிறைவேற்ற தெளிவான பெரும்பான்மை தேவையாக காணப்பட்ட நிலையில் அதனை தற்போது பெற்றுள்ளனர்.
(Visited 8 times, 1 visits today)