இலங்கை

இலங்கை: தடுப்பூசி செலுத்திய 5 மாணவிகள் வைத்தியசாலையில்!

களுத்துறை – அங்குருவத்தோட்ட பகுதியில் HPV தடுப்பூசி செலுத்திய 12 வயதுடைய பாடசாலை மாணவிகள் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையில் தரம் 7 இல் கல்வி பயிலும், 5 மாணவிகளே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த பாடசாலையில் 26 மாணவிகளுக்கு HPV தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும், அதில் 5 மாணவிகள் சுகவீனமடைந்துள்ளதாகவும் அங்குருவத்தோட்ட காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

HPV தடுப்பூசி செலுத்திய பின்னர் 5 மாணவிகளுக்குத் தலைவலி, வயிற்று வலி மற்றும் தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.

இதனையடுத்து அவர்கள் ஹல்தொட்ட பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஹொரண மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அங்குருவாதொட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 3 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்