ஒரு வருடத்திற்கும் மேலாக காணாமல் போன சிறுமியின் உடல் பிரான்சில் மீட்பு!
13 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பிரான்ஸ் இளம்பெண்ணின் சடலம், கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பிரெஞ்சு ஊடகங்களில் “லினா” என்று மட்டுமே குறிப்பிடப்படும் 15 வயது சிறுமியை போலீஸார் கடந்த ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி மர்மமான முறையில் காணாமல் போனதில் இருந்து தேடி வந்தனர்.
ஒரு வருடங்களாக அவர் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்காத நிலையில், மத்திய கிழக்கு பகுதியான Nièvre நகரில் ஆள் அரவமற்ற ஒதுக்குப்புறமான சதுப்பு நிலப்பகுதி ஒன்றில் மரக்கட்டைகளுக்கு இடையே அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தடயவியல் நிபுணர்கள் மாதிரிகளை சேகரித்து, அது லீனாவின் சடலம் என்பதை உறுதி செய்துள்ளனர்.
அவரைக் கடத்தி கொலை செய்திருந்தார் என சந்தேகிக்கப்பட்ட 43 வயதுடைய Samuel Gonin என்பவர், கடந்த ஜூலை மாதம் தற்கொலை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.