பிரான்ஸில் கார் ஒன்றை சோதனையிட்டவர்கள் அதிர்ச்சி – தீவிர விசாரணையில் பொலிஸார்
பிரான்ஸில் Châtillon (Hauts-de-Seine) நகரில் கார் ஒன்றுக்குள் ஆண் ஒருவரது சடலம் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சந்தி ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் ஆண் ஒருவரது சடலம் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர்.
காரின் பின் இருக்கையில், பாதி எரிந்த நிலையில் இந்த சடலம் இருந்ததாகவும், வேறு சில தழும்புகளும் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் மீட்கப்பட்டு உடற்கூறு பரிசோதனைக்காக சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் Val-d’Oise மாவட்டத்தில் வசிப்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 8 times, 1 visits today)