இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் – அதிமுக வேட்பாளரை விரட்டி அடித்த இஸ்லாமிய மக்கள்
எதிர்வரும்வரும் 19ஆம் திகதி இந்தியாவின் 18 வது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியுடன் போட்டியிடுகின்றனர்.
ஒவ்வொரு தொகுதிகளும் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்கள் பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கு வாக்கு சேகரிக்கும் வகையில்
இன்று மாலை திருச்சி பாலக்கரையில் உள்ள நானா. மூ.நா பள்ளிவாசலில்
மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில், முன்னாள் மாநிலங்கள் அவை உறுப்பினர் ரத்தினவேலு கட்சியின் நிர்வாகிகள் கார்த்திகேயன் மாமன்ற உறுப்பினர் அரவிந்தன் மற்றும் எஸ் டி பி ஐ கட்சியின் நிர்வாகிகள் இஸ்லாமியர்களின் தொழுகைக்கு வரும்போது தலையில் குல்லா அணிந்து செல்வது வழக்கம். அந்த வகையில் அதிமுகவினர் குல்லாவை அணிந்து கொண்டு மற்றும் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் பள்ளிவாசலுக்குள்
சென்று வாக்கு சேகரித்தனர்.
அப்போது அங்கு வந்த இஸ்லாமிய பெருமக்கள் யாரை கேட்டு உள்ளே வந்தீர்கள் என அவர்களை அங்கிருந்து உடனடியாக போகும் விரட்டி அடித்தனர்.
இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக வேட்பாளர் கருப்பையா மற்றும் அதிமுக, எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் அங்கிருந்து புறப்பட்டனர்.