இலங்கை செய்தி

விபத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி

இன்று (20) மாலை  இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

களுத்துறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றும், தொடங்கொட புஹம்புகொட பிரதேசத்தில் வசித்து வந்த சார்ஜன்ட் தமயந்தி வீரசூரிய என்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பணி முடிந்து மலபாடா சந்தியில் பேருந்தில் இருந்து இறங்கி, பாதசாரி கடவையில் சாலையைக் கடக்கும்போது இந்த விபத்தை எதிர்கொண்டார்.

மத்துகமவில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த பாரவூர்தி அவர் மீது மோதியுள்ளது.

பலத்த காயமடைந்த அவர் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பில் பாரவூர்தி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

(Visited 3 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை