உலகம்

காங்கோவில் போராட்டக்காரர்கள் தாக்குதலில் 9 ராணுவ வீரர்கள் உட்பட 70 பேர் பலி!

காங்கோ தலைநகர் கின்ஷாசாவில் உள்ள கின்செல் கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக இரண்டு சமூகங்களுக்கு இடையே மோதல் நடந்து வருகிறது. நில உரிமைகள் மற்றும் அப்பகுதியின் வரலாற்று குடிமக்கள் மற்றும் காங்கோ ஆற்றின் அருகே குடியேறிய யக்கா உள்ளிட்ட பல்வேறு இனங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இடையே நில உரிமைகள் தொடர்பாக பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் காங்கோவின் ஜனாதிபதி பெலிக்ஸ் சிசெகெடி முன்னிலையில் போர் நிறுத்தம் ஒப்புக் கொள்ளப்பட்ட போதிலும், இரு சமூகங்களுக்கிடையில் மோதல்கள் தொடர்ந்து தீவிரமடைந்துள்ளன. காங்கோ ராணுவம் வன்முறையை அடக்குவதில் தோல்வியடைந்தது.

இதையடுத்து காங்கோ கிழக்கில் போராளிகள் ஆயுதங்களுடன் போரிட்டு வரும் நிலையில், நாட்டின் மேற்கு பகுதியிலும் வன்முறை தீவிரமடைந்துள்ளது. இந்த தாக்குதலில் 9 ராணுவ வீரர்கள் உள்பட 70 பேர் கொல்லப்பட்டனர். இந்த பகுதியில் வன்முறயை கட்டுப்படுத்த ராணுவம் போராடி வருகிறது.

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்