இந்தியா செய்தி

பீகாரில் 5 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மரணம்

பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் குடிசை தீப்பிடித்ததில் ஐந்து குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

மாவட்டத் தலைமையகமான சசாரத்தில் உள்ள நஸ்ரிகஞ்ச் துணைப்பிரிவில் உள்ள இப்ராஹிம்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பலியானவர்கள் புஷ்பா தேவி (30), அவரது இரண்டு மகள்கள்,காஜல் குமாரி (4), குடியா (2) மற்றும் அவரது மகன் பஜ்ரங்கி குமார் (6) என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

மேலும் பலியானவர்கள் புஷ்பாவின் உறவினர்களான காந்தி குமாரி (6), ஷிவானி (3) மற்றும் மாயா தேவி (25) ஆகியோர் ஆவர்.

மேலும் தீக்காயம் அடைந்த ராஜூ தேவி என்ற பெண் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு உரிய இழப்பீடு கிடைப்பதை நிர்வாகம் உறுதி செய்யும் என்று பிக்ரம்கஞ்ச் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் அனில் பாசக் தெரிவித்தார்.

குடிசை அருகே உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட மின்கசிவுதான் தீ விபத்துக்கு காரணம் என கிராம மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த துயர சம்பவத்திற்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி