செய்தி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5 பேர் அதிரடியாக கைது

05 பயணிகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.

ஒரு கோடியே 58 லட்சத்து இருபதாயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட், விஸ்கி மற்றும் செய்மதி தொலைக்காட்சி ஒலிபரப்பு உபகரணங்களை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த ஐவரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

2 சீன பிரஜைகள், 2 இலங்கையர்கள் மற்றும் இந்திய பிரஜை ஒருவரினால் இந்த சரக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான முறையான சுங்க விசாரணையை, சுங்க திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி பணிப்பாளர்களே ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

மேலும், அவர்கள் சட்டவிரோதமாக கொண்டு வந்த பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த பயணிகளுக்கு 3 இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி