இந்தியா

அலையென திரண்ட மக்கள் – முதல் தேர்தல் பரப்புரைக்காக திருச்சியில் களமிறங்கிய விஜய்!

  • September 13, 2025
  • 0 Comments

த.வெ.க தலைவர் விஜய் இன்று (13.09) தனது தேர்தல் பரப்புரையின் முதல் கூட்டத்தை திருச்சியில் நடத்தவுள்ளார். இதில் கலந்துகொள்வதற்காக காலை சிறப்பு விமானத்தில் பயணித்த அவர் தற்போது  திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகில் பரப்பரையை நடத்தவுள்ளார். இந்நிலையில் அவரை காண ஏராளமான மக்கள் திரண்ட நிலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் 50 பேர் மயக்கமடைந்த நிலையில் முதலுதவிகள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய வேறு கட்சிகள் வழமைபோல் அவருக்கு ஒன்றுசேரும் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் 09 காவல்துறை அதிகாரிகள் பணியிடைநீக்கம் – சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு!

  • September 13, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் 09 கவால்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சேரிங் கிராஸ் காவல் நிலையத்தில் பிபிசி நடத்திய விசாரணையைத் தொடர்ந்து குறித்த அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு தற்போது காவல் கண்காணிப்புக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிகப்படியான பலத்தைப் பயன்படுத்துதல், பாரபட்சமான மற்றும் பெண் வெறுப்பு கருத்துக்கள் மற்றும் பொருத்தமற்ற நடத்தையைப் புகாரளிக்கவோ அல்லது சவால் செய்யவோ தவறியது ஆகிய குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. பணியிடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் போலீஸ் கான்ஸ்டபிள் முதல் சார்ஜென்ட் வரை பதவிகளில் இருப்பதாக […]

ஆஸ்திரேலியா

நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பாலஸ்தீன ஆதரவு பேரணி

  • September 13, 2025
  • 0 Comments

நியூசிலாந்தின் ஆகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 13) நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவுப் பேரணியில் பல்லாயிரம் பேர் திரண்டனர். இஸ்ரேலுக்கும் பாஸ்தீனப் போராளிக் குழுவான ஹமாசுக்கும் இடையில் காஸா போர் மூண்ட பின்னர் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக நடைபெற்று இருக்கும் ஆகப்பெரிய பேரணி இது என ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். மத்திய ஆக்லாந்தில் மனிதநேயப் பேரணி என்று அழைக்கப்பட்ட ஊர்வலத்தில் ஏறத்தாழ 50,000 பேர் கலந்துகொண்டதாக ஆட்டேரோவா என்னும் பாலஸ்தீன ஆதரவுக் குழு தெரிவித்தது.ஆனால், கிட்டத்தட்ட 20,000 பேர் அதில் […]

ஐரோப்பா

உக்ரைன் தலைநகர் கீய்வுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட இளவரசர் ஹரி!

  • September 13, 2025
  • 0 Comments

இளவரசர் ஹரி உக்ரைனின் தலைநரகான கீய்வுக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். போரினால்  பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனியர்களை ஆதரிக்கும் அமைப்பின் அழைப்பை தொடர்ந்து அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இதன்போது போரில் காயமடைந்த ராணுவ வீரர்களின் மீட்புக்கு “முடிந்த அனைத்தையும்” செய்ய விரும்புவதாகக் கூறினார். காயமடைந்தவர்களுக்கு செயற்கை மூட்டுகள் மற்றும் மறுவாழ்வு வழங்க உதவுவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். ரஷ்யாவின் உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பின் விளைவாக பல்லாயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளனர். உக்ரைன் […]

இலங்கை செய்தி

இலங்கையின் தொழிலாளர் சந்தையில் இளைஞர்களின் பங்களிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி!

  • September 13, 2025
  • 0 Comments

இலங்கையில் பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் பலர் (42 சதவீதமானோர்) 10 ஆம் வகுப்பு வரை மாத்திரமே படித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 26.7 சதவீத மக்கள் மட்டுமே உயர்நிலைக்கு மேல் தகுதிகளைக் கொண்டுள்ளனர் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறை (DCS) தெரிவித்துள்ளது. மொத்த வேலை செய்யும் நபர்களில் 62.4 சதவீதம் பேர் 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் என்றும், 15.3 சதவீதம் பேர் மட்டுமே 20 முதல் 29 […]

ஆசியா

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 வீரர்கள் படுகொலை

  • September 13, 2025
  • 0 Comments

பாகிஸ்தானின் வடமேற்கு தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகாலை பாதுகாப்புப் படையினரின் நிலை மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 12 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. உள்ளூர் நேரப்படி அதிகாலை 5 மணியளவில் பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரின் ஒரு தொகுதி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியபோது இந்த சம்பவம் நடந்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத நிலையில் வட்டாரங்கள் தெரிவித்தன. காயமடைந்த அனைத்து வீரர்களின் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக வட்டாரங்கள் […]

ஆப்பிரிக்கா

நைஜீரியாவில் குடித்து விட்டு விமானத்தை செலுத்திய விமானிகளால் பரபரப்பு!

  • September 13, 2025
  • 0 Comments

நைஜீரியாவில் விமானி மற்றும் துணை விமானி ஆகியோர் குடித்துவிட்டு விமானத்தை செலுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜுலை மாதம் போயிங் 737 விமானத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தால் பயணிகள் யாரும் பாதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. விமானத்தை இயக்கிய ஏர் பீஸ் நிறுவனம், பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்கத் தவறியதற்காக 64 வயதான விமானி பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், துணை விமானி பின்னர் தனது பணிக்குத் திரும்பியதாகவும் தெரிவித்துள்ளது. NSIB நடத்திய சோதனைகளில், விமானி மற்றும் துணை விமானி எத்தில் குளுகுரோனைடு […]

ஆசியா

நேபாளத்தில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் – புதிய தேர்தலுக்கு அழைப்பு!

  • September 13, 2025
  • 0 Comments

நேபாள அதிபர் ராமச்சந்திர பவுடெல் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இடைத்தேர்தல் மார்ச் மாதம் 05 ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அந்நாட்டில் ஏற்பட்ட வன்முறை மோதல்களுக்கு பிறகு புதிய பிரதமராக முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கியை தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்கு பிறகு நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

ட்ரோன் ஊடுருவல்களை அடுத்து அமெரிக்கா உட்பட 40க்கும் மேற்பட்ட நாடுகள் ஐ.நா.நடவடிக்கைக்கு அழைப்பு

  • September 13, 2025
  • 0 Comments

ரஷ்ய ட்ரோன்கள் போலந்து வான்வெளியை அத்துமீறி நடத்தியதை அடுத்து, அமெரிக்கா உட்பட 40க்கும் மேற்பட்ட நாடுகள் வெள்ளிக்கிழமை ஐ.நா.வில் வலுவான சர்வதேச நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்தன. இது பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு ஸ்திரமின்மை விரிவாக்கம் என்று அவர்கள் விவரித்தனர். வார்சா கோரிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு முன்னதாக போலந்து வெளியுறவுத்துறை செயலாளர் மார்சின் போசாக்கி ஒரு கூட்டு அறிக்கையை சமர்ப்பித்தார். போலந்து வரலாற்றில் முதல்முறையாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தைக் கூட்டுமாறு […]

உலகம்

கொலம்பியாவில் இடிந்து விழுந்த தங்கச் சுரங்கம் – சிக்கிய 7 பேர்

  • September 13, 2025
  • 0 Comments

கொலம்பியாவின் கோகோ பகுதியில் சட்டவிரோத தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் ஏழு பேர் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை முதல் இந்தக் குழு சுரங்கத்தில் சிக்கித் தவிக்கிறது. அவர்கள் தரை மட்டத்திலிருந்து 28 மீட்டர் கீழே இருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், மீட்பு முயற்சிகளுக்கு அதிகாரிகள் போதுமான ஆதரவை வழங்கவில்லை என்றும், இதன் விளைவாக, உள்ளூர்வாசிகள் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோகோ பகுதியில் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி நடப்பதாகக் கூறப்படுகிறது, இது அதிக எண்ணிக்கையிலான […]