மலேசியாவில் மேருவில் உள்ள மோட்டார்சைக்கிள் கடைக்கு அருகே நபர் ஒருவர் சுட்டுக்கொலை
மலேசியாவின் கிள்ளான் வட்டாரத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) பிற்பகல், நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. ஜாலான் மேருவில் உள்ள மோட்டார்சைக்கிள் கடைக்கு அருகே அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் இருந்த நபவரை நோக்கி ஆறுமுறை துப்பாக்கியால் சுடப்பட்டதாக ஃபேஸ்புக்கில் ஒருவர் பதிவிட்டுள்ளார். “மேரு மக்களே, கவனமாயிருங்கள். சற்று முன்னர் இங்கு ஒரு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது,” என்று அவர் குறிப்பிட்டுள்ள பதிவு இணையத்தில் வேகமாகப் பரவியதாக ‘சினார் ஹரியான்’ நாளேடு தெரிவித்துள்ளது. மேலும் பலர், […]













