ஒடிசாவில் குடும்ப உறுப்பினர்களின் சடலங்களுடன் 2 நாட்கள் வசித்த 65 வயது பெண்
ஒடிசாவின் தேன்கனல் மாவட்டத்தில் 65 வயதுடைய ஒரு பெண், தனது குடும்ப உறுப்பினர்கள் மூவரின் சடலங்களுடன் இரண்டு நாட்களாக வசித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார். தேன்கனல் சதார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சௌலியா கமர் கிராமத்தில் உள்ள அவர்களது வீட்டில் பெண்ணின் கணவர், அவரது மகள் மற்றும் பேரன் ஆகிய மூவரின் அழுகிய உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன. காவல் நிலையப் பொறுப்பாளர் பூர்ணா சந்திரா ரௌத், அந்த பெண் புஷ்பாஞ்சலி […]













