ஐரோப்பா

சீன நிறுவனம் மற்றும் இரண்டு நபர்களுக்கு எதிராக தடை விதித்த அமெரிக்கா மற்றும் பிரித்தானியா

சட்டமன்ற உறுப்பினர்கள், வாக்காளர்கள் மற்றும் முக்கிய பெய்ஜிங் விமர்சகர்கள் உட்பட மில்லியன் கணக்கான மக்களை குறிவைத்து இணைய உளவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் ஒரு சீன நிறுவனம் மற்றும் இரண்டு நபர்களுக்கு எதிராக அமெரிக்காவும் பிரித்தானியாவும் தடைகளை அறிவித்துள்ளன. திங்களன்று, பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் இந்த ஹேக் “தேர்தல் செயல்முறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, எந்தவொரு தனிநபரின் உரிமைகள் அல்லது ஜனநாயக செயல்முறைக்கான அணுகலை பாதிக்கவில்லை, அல்லது தேர்தல் பதிவை பாதிக்கவில்லை” என்று கூறியது. இங்கிலாந்து துணைப் பிரதமர் […]

இலங்கை

இலங்கையில் சுற்றுலா பயணிகளை கவர புதிய நடவடிக்கை!

  • March 26, 2024
  • 0 Comments

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை விசேட புகையிரதத்தை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் நானுஓயாவில் இருந்து பதுளை வரை சுற்றுலா பயணிகளை பார்வையிடும் விசேட பெட்டியுடன் கூடிய புகையிரதமும் சேவையில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஏப்ரல் 5 ஆம் திகதி, எல்ல, ஒன்பது ஆர்ச் மற்றும் இந்த சுற்றுலாத்தலங்கள் […]

ஆசியா

பாகிஸ்தானில் சீன நாட்டினரின் கான்வே வாகனம் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 13பேர் பலி!

  • March 26, 2024
  • 0 Comments

பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் சீனாவை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். தசு எனும் பகுதியில் சீன நாட்டினரின் கான்வே வாகனத்தின் மீது தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தானின் பல பகுதிகளில் நடைபெறும் கட்டுமானப்பணிகளில் சீன நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. சீன பொறியாளர்கள் சென்ற வாகனத்தின் மீது ஆயுதக்குவியலுடன் வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி வெடிக்கச் செய்துள்ளார். இந்த நிலையில், இந்த தாக்குதலில் சீனாவைச் சேர்ந்த 5 பேர் பாகிஸ்தானை சேர்ந்த கார் டிரைவர் உள்பட மொத்தம் 6 […]

இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மைத்திரி வழங்கிய வாக்குமூலம் மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்து!

  • March 26, 2024
  • 0 Comments

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குமூலங்கள் மக்களுக்கு வெளிப்படுத்தப்படவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். அவரது அலுவலகத்தில் இன்று (26.03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தல்களை தள்ளிப்போடுவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடே தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பான சட்டமூலம் கொண்டுவரப்படுகின்றதா […]

இலங்கை

காணிகளை விடுவிப்பது தொடர்பில் உறுதியான முடிவு கிடைக்கவில்லை: கேப்பாபுலவு மக்கள் விசனம்

தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் இதுவரை தனக்கு உறுதியான முடிவு கிடைக்கவில்லை என முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் தெரிவித்ததாக கேப்பாபுலவு மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தமது காணிகளை விரைவில் விடுவிக்கக்கோரி ஜனாதிபதிக்கும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கும் கடந்த 11.03.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர். இதன்போது குறித்த கடிதத்தை தான் உரிய தரப்புக்களுக்கு அனுப்பி பத்து நாட்களில் ஒரு பதிலை பெற்று வழங்குவதாக தெரிவித்தார் இந்நிலையில் நேற்று […]

இலங்கை

திருகோணமலை – சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட பாவனைக்குதவாத உணவுப்பொருட்கள்

  • March 26, 2024
  • 0 Comments

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்துக்குட்பட்ட பகுதியில் (25) மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போது பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், பல வியாபார நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை பிராந்திய சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக உணவகங்கள், பேக்கரிகள்,வியாபார நிலையங்கள், உணவு உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போது குளிர்சாதன பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் விடயத்துக்கு பொறுப்பான அதிகாரியொருவர் தெரிவித்தார். இதன்போது எட்டு வியாபார […]

இந்தியா

தினமும் பாடசாலைக்கு குடித்து விட்டு வந்த ஆசிரியர்… மாணவர்கள் செய்த செயல் !

  • March 26, 2024
  • 0 Comments

சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் மாவட்டத்தில் குடிபோதையில் இருந்த ஆசிரியரை மாணவர்கள், செருப்பை வீசி விரட்டியடித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சத்தீஸ்கரின் பஸ்தர் மாவட்டத்தில் உள்ள பாலிபட்டா தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தினமும் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார். அவர் குழந்தைகளுக்கு பாடம் நடத்தாமல் தரையில் படுத்துத் தூங்கியுள்ளார். குழந்தைகள் பாடம் சம்பந்தமாக ஏதாவது கேட்டால், அவர்களை அந்த ஆசிரியர் திட்டி வந்துள்ளார். இதனால் கோபமடைந்த குழந்தைகள், போதை ஆசிரியருக்கு தகுந்த பாடம் […]

இலங்கை

முல்லைத்தீவில் குருதி கொடை வழங்கும் நிகழ்வு!

  • March 26, 2024
  • 0 Comments

சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் குருதி கொடை வழங்கும் நிகழ்வு இன்று (26.03)  இடம்பெற்றுள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் ” ஈடு இணையற்றது நம் உடலில் ஓடும் குருதி !அதை பிறர்க்கும் சிறிது பகிர்ந்தளிக்க ஏற்போம் இந்தநாளில் உறுதி ! எனும் தொனிப் பொருளில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. குறித்த குருதி கொடை வழங்கும் நிகழ்வில் இளைஞர்கள், இளம் குருதி […]

இலங்கை

திருகோணமலை கட்டையாறு பாலம் மக்களிடம் கையளிப்பு

திருகோணமலை வெருகல் பகுதியில் கட்டையாறு பாலம் அமைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது. இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் அவர்களின் முயற்சியால் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வெருகல் பகுதியில் கட்டையாறு பாலம் அமைக்கப்பட்டு இராஜாங்க அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது. 50 மில்லியன் ரூபாய் செலவில் வெருகல் -கட்டையாறுப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. வெருகல் கட்டையாறு பாலம் அமைக்கப்பட்டதன் மூலம் வெருகல் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த சுமார் 1500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் நன்மையடையவுள்ளனர். […]

இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட உயிரினங்கள் – இளம் வர்த்தக தம்பதியினர் கைது

  • March 26, 2024
  • 0 Comments

தாய்லாந்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பல உயிரினங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இளம் வர்த்தக தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் நாற்பது இலட்சம் ரூபா பெறுமதியான 88 உயிருள்ள விலங்குகளுடன் இந்த ஜோடி கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளது.குறித்த இருவரும் தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-405 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை திங்கட்கிழமை (25) பிற்பகல் 04.35 மணியளவில் வந்தடைந்துள்ளனர். சுங்கத்துறையின் பல்லுயிர் பிரிவு […]

error: Content is protected !!