இலங்கை

பொரளை- 14 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் பலி!

  • March 26, 2024
  • 0 Comments

பொரளை டி.எஸ்.சேனநாயக்க மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தின் 14வது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் உயிரிழந்தவர் பதவிய போகஸ்வெவ, அருணகம, இலக்கம் 63 இல் வசித்து வந்த நளின் சம்பத் பிரேமரத்ன, ஹேரத் முதியன்சேலா என்ற 24 வயதுடைய நபராவார். 18 மாடிகள் கொண்ட கட்டிடத்தின் 14வது மாடியில் கொத்தனார் ஒருவருக்கு உதவிய போது உயிரிழந்த நபர் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.  

வட அமெரிக்கா

அமெரிக்கா-புளோரிடாவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!

  • March 26, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் குழந்தைகளுக்கான சமூக வலைத்தளங்களை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அது குறித்த சட்டத்தில் புளோரிடா மாகாண ஆளுநர் கையெழுத்திட்டுள்ளார். புளோரிடா மாகாணத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடக கணக்குகளை வைத்திருப்பதை சட்டம் தடை செய்கிறது. தற்போது 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சமூக வலைத்தள கணக்குகளை நீக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என புளோரிடா மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார்.

இலங்கை

யாழில் அக்குபஞ்சர் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் உயிரிழப்பு !

  • March 26, 2024
  • 0 Comments

யாழ் அச்சுவேலி கிழக்கு பகுதியில் அக்குபஞ்சர் சிகிச்சை பெற்றுக்கொண்ட மாணிக்கம் சற்குணராஜா (வயது 64) என்பவர் உயிரிழந்துள்ளார். முழங்கால் வலியினால் அவதிப்பட்டு வந்தவர் யாழ்.நகர் பகுதியை அண்மித்த பிறவுண் வீதியில் அக்குபஞ்சர் சிகிச்சை நிலையம் என்ற பெயரில் இயங்கி வரும் சிகிச்சை நிலையத்திற்கு சமூக வலைத்தளங்களில் வந்த விளம்பரங்களை நம்பி சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு முழங்கால் வலிகளை போக்குவதாக முழங்கால்களில் ஊசிகளை குத்தி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சையின் பின்னர் கடுமையான வலிகள் ஏற்பட்டமையால் , யாழ்.போதனா வைத்தியசாலையில் […]

விளையாட்டு

2024 மகளிர் ஆசியக் கோப்பை இலங்கையில்…!

2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆசிய கிரிக்கெட் பேரவை இதனை அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 19 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 28 ஆம் திகதி வரை தம்புள்ளையில் குறித்த போட்டிகள் இடம்பெறவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது. இந்தப் போட்டித் தொடரில் 8 அணிகள் பங்கேற்கும்.

இலங்கை

வரும் ஒக்டோபர் மாதம் இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும்!

  • March 26, 2024
  • 0 Comments

அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடம் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், அண்மையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அரசியல் அமைச்சரவைக்கு இது அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐரோப்பா

ஆஸ்திரிய பொலிஸ் அதிகாரிகளுக்கு பரிசு வழங்கிய ரஷ்யா!

  • March 26, 2024
  • 0 Comments

ஆஸ்திரிய பொலிஸ் அதிகாரிகளுக்கு ரஷ்யாவில் சிறிய பரிசு பொருட்கள் வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரஷ்ய ஜனாதிபதி தேர்தலின்போது ரஷ்ய தூதரகத்தை சுற்றி பாதுகாப்பு வழங்கப்பட்டமைக்காக இந்த பரிசு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும் எதிர்காலத்தில் இதுபோன்ற பரிசுகளை நிராகரிக்குமாறு காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர், ஆஸ்திரிய அரசாங்கம் வியன்னாவில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் இருந்து இரண்டு தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடுவதாக அறிவித்தது, மேலும் இந்த வெளியேற்றங்கள் உளவு நடவடிக்கைகள் தொடர்பானவை என்று […]

ஆசியா

இஸ்ரேல் தூதரகத்திற்கு வெளியே பாரிய போராட்டம்: ஜோர்டான் படையின் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுடனான ஜோர்டானின் சமாதான உடன்படிக்கையை நிறுத்தக் கோரி, ஜோர்டானின் தலைநகரில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் இரண்டாவது நாளாக கூடினர். பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், கைது செய்தும் ஆர்ப்பாட்டங்களை கலைத்துள்ளனர். சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.

ஐரோப்பா

ஜேர்மனியில் வேலை நேரத்தை குறைக்க நடவடிக்கை!

  • March 26, 2024
  • 0 Comments

ஜேர்மனியின் பிரதான  ரயில்வே ஆப்ரேட்டருக்கான ரயில் ஓட்டுநர்கள் மற்றும் சில பணியாளர்கள் 2029 ஆம் ஆண்டுக்குள் அவர்களது வேலை வாரத்தை 38 மணிநேரத்திலிருந்து 35 மணிநேரமாக குறைப்பார்கள்  என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதிக சம்பளத்திற்கு கூடுதல் மணி நேரம் வேலை செய்ய விரும்பம் தெரிவித்துள்ளனர். ஏறக்குறை ஐந்துமாதங்களாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து இதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. ஊதியக் குறைப்பு இல்லாமல் வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என்ற GDL இன் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 முதல் […]

பொழுதுபோக்கு

ஸ்ருதி ஹாசனுடன் படு ரொமான்ஸ்.. மனைவி பற்றி பேசியதால் கடுப்பான லோகேஷ்

  • March 26, 2024
  • 0 Comments

லோகேஷ் கனகராஜ்தான் இப்போது தமிழ் சினிமாவின் டாப் இயக்குநர். இதுவரை இயக்கிய படங்களில் லியோ படம் மட்டும்தான் அவருக்கு சுமாரான ஹிட்டை கொடுத்திருக்கிறது. மற்ற அனைத்து படங்களுமே அவரை உயர்ந்த இடத்துக்கு கொண்டு சென்றன. அடுத்ததாக ரஜினியை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கவிருக்கும் அவர் தற்போது “இனிமேல்” என்ற ஆல்பம் பாடலின் மூலம் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் அவரது மனைவி குடும்பம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு லோகேஷ் காண்டாகி பதிலளித்திருக்கிறார். நேற்று இனிமேல் ஆடியோ […]

இலங்கை

மே தினக் கூட்டம் : ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெளியிட்ட அறிவிப்பு!

  • March 26, 2024
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த வருடம் கொழும்பு கெம்பல் மைதானத்தில் மே தினக் கூட்டத்தை நடத்தவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இன்று (26.03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். எதிர்காலத்தில் பொதுத் தேர்தலா அல்லது ஜனாதிபதித் தேர்தலா என்பதைத் தீர்மானிக்க முடியாது எனவும், அதனை அரசாங்கம் அல்லது தேர்தல்கள் ஆணைக்குழுவே தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த தேர்தலுக்கும் தயாராக இருப்பதாக திரு […]

error: Content is protected !!