ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! யாழ்.ஊடக அமையம்
ஊடக அடக்குமுறையினை கட்டவிழ்த்து கைது செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென யாழ்.ஊடக அமையம் கோரியுள்ளது. இலங்கை இளம் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், சுயாதீன ஊடகவியலாளருமான தரிந்து உடுவரகெதர நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த போராட்டத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது, பொரளையில் வைத்து பொலிஸார் கைது செய்தனர். குறித்த கைது நடவடிக்கையை கண்டித்து, யாழ்.ஊடக அமையம் வெளியிட்டுள்ள அறிக்கையையையே அவ்வாறு கோரியுள்ளது. அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையில் […]













