ஆஸ்திரேலியாவில் முட்டை தேடி அலையும் மக்கள் – ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு
ஆஸ்திரேலியாவின் பல பெரிய பல்பொருள் அங்காடிகளில் மீண்டும் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் முட்டை விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 4 டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை பொதியின் விலை தற்போது 8 டொலர் முதல் 9 டொலர் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2025ஆம் ஆண்டுக்குள் பல்பொருள் அங்காடிகளால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தீர்மானம் இதனை நேரடியாகப் பாதித்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிறப்புக் கூண்டுகளில் அடைக்கப்பட்ட கோழிகள் இடும் கூண்டில் […]













