காவிரியிலிருந்து அட்டவணைப்படி நீர் திறந்து விட வேண்டும்: கர்நாடக அரசுக்கு காவிரி ஆணையம் அறிவுறுத்தல்!
காவிரியிலிருந்து அட்டவணைப்படி நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக- கர்நாடக எல்லையில் மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட திட்டமிட்டுள்ள கர்நாடகா அதற்கான நிதியை ஒதுக்கி ஏற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அணை கட்ட இடைக்கால தடை விதிக்கப்பட்ட சூழலில் ஒன்றிய அரசின் சுற்றுசூழல் அமைச்சகமும் இதுவரை அனுமதி வழங்கவில்லை. இதனிடையே காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16 வது கூட்டம் […]













