சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!
இலங்கையில் சமூக வலைத்தளங்களினூடாக 108 பண மோசடி சம்பவங்கள் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 75 பேர் இதுவரையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், சமூக வலைத்தளங்களினூடாக பண மோசடி சம்பவங்கள் அதிகம் பதிவாகும். இந்த நிலையில் தமது தனிப்பட்ட தகவல்களை மற்றுமொரு தரப்பினருக்கு வழங்க வேண்டாம் என கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி. ஜெயநெத்சிறி தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் […]













