இந்தியா செய்தி

சளி, காய்ச்சலுக்கான 59 மருந்துகள் தரமற்றவை என இந்திய மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவிப்பு.

  • April 19, 2023
  • 0 Comments

இந்திய முழுவதும் விற்பனைசெய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. குறித்த ஆய்வின்போது போலி மற்றும் தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கடந்த பெப்ரவரி மாதத்தில் மாத்திரமா 1,251 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், காய்ச்சல், சளி, கல்சியம், இரும்புச்சத்து, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 59 மருந்துகள் தரமற்றவையாக கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலானவை இமாச்சலப் […]

இந்தியா செய்தி

சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

  • April 19, 2023
  • 0 Comments

இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சியின் (பிஜேபி) நாடாளுமன்ற உறுப்பினரால் தனக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 52 வயதான நேரு-காந்தி அரசியல் வம்சத்தின் வாரிசும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான காந்தி, 2019 ஆம் ஆண்டு ஒரு உரையில் அவர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக மேற்கு குஜராத் மாநிலத்தின் நீதிமன்றத்தால் அவதூறு வழக்கில் […]

இந்தியா செய்தி

பெங்களூரு அணி அதிரடி வெற்றி

  • April 19, 2023
  • 0 Comments

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் மற்றும் இஷன் கிஷன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் இஷன் கிஷன் 10 ரன், ரோகித் 1 ரன், அடுத்து களம் இறங்கிய கேமரூன் க்ரீன் 5 ரன், சூர்யகுமார் யாதவ் 15 ரன் […]

இந்தியா செய்தி

இன்றைய பகல் நேர போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி

  • April 19, 2023
  • 0 Comments

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. அபாரமாக ஆடிய யாஷாஸ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர் இருவரும் தலா 54 ரன்கள் குவித்து வலுவான அடித்தளம் அமைத்தனர். கேப்டன் சஞ்சு சாம்சன் 55 ரன்கள் விளாசினார். இதையடுத்து 204 ரன்கள் எடுத்தால் […]

இந்தியா செய்தி

பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து மோடி கருத்து!

  • April 19, 2023
  • 0 Comments

நாடு முழுவதும் உள்ள தனது செல்வாக்கை சீர்குலைக்க உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பலர் வேலைசெய்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஒற்றைக் குடும்ப அரசியலின் விளைவால் ரயில்வே துறை இழப்பைச் சந்தித்ததாக விமர்சித்தார்.  மேலும் தனது செல்வாக்கை சீர்குலைக்க உள்நாட்டில் இருப்பவர்களுக்கு வெளிநாட்டினர் சிலர் உதவி புரிந்து வருவதாகவும் குறிப்பிட்டார். எத்தனை வெளிநாட்டினர் உடன் சேர்ந்து சதி செய்தாலும் ஒவ்வொரு இந்தியனும் […]

இந்தியா செய்தி

பெற்றோர் கூறிய வார்த்தை..விபரீத முடிவை எடுத்த 9ம் வகுப்பு மாணவன்!

  • April 19, 2023
  • 0 Comments

தமிழகத்தின் சென்னையில் 9ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சென்னை திருவொற்றியூர் ஜோதி நகரைச் சேர்ந்தவர் பரிமளராஜ். இவருடைய 15 வயது மகன் ரிஷி, அரசு பாடசாலையில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.ரிஷிக்கு படிப்பில் அதிக நாட்டம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ரிஷியை சரியாக படிக்கும்படி கூறி வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் குளியல் அறைக்குள் சென்ற ரிஷி நீண்ட நேரமாக வெளியேற […]

இந்தியா செய்தி

சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் குழு அடக்கி பரிசுகளை தட்டி சென்றது

  • April 19, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கட்டளை மேட்டு கொள்ளை திடலில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. சீறி பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் குழு அடக்கி பரிசுகளை தட்டி சென்றது. புதுக்கோட்டை மாவட்டம் திருக்கட்டளை மேட்டு கொள்ளை திடலில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். திருச்சி புதுக்கோட்டை காரைக்குடி சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 10 காளைகள் பங்கு பெற்றன. 9 பேர் கொண்ட 10குழுக்களாக வீரர்கள் […]

இந்தியா செய்தி

தமிழ்நாட்டில் சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் பாரிய ஆர்ப்பாட்டம்

  • April 19, 2023
  • 0 Comments

சுங்கச்சாவடி கட்டணக் கொள்ளையை கண்டித்தும், அரசின் தவறான மோட்டார் வாகன கொள்கைகளை கண்டித்தும் தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் உள்ளிட்டு பல்வேறு அமைப்புகள்  சார்பில் நாடு முழுவதும் நேற்று சுங்கச்சாவடிகள் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் ஒரு சில பகுதிகளாக சென்னை மாத்தூர் மஞ்சம்பாக்கம் சுங்கச்சாவடி மற்றும் மதுரவாயல் சுங்கச்சாவடி பகுதிகளில் இந்த போராட்டமானது  நடைபெற்றது நாடு முழுவதும் 460 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதைக் கண்டித்து,  தமிழகம் முழுவதும் லொரி உரிமையாளர்கள் […]

இந்தியா செய்தி

இந்தியாவில் 3 பவுன் தங்க சங்கிலியை விழுங்கிய நாய்க் குட்டி

  • April 19, 2023
  • 0 Comments

இந்தியாவில் மூன்று பவுன் தங்க சங்கிலியை குட்டி நாய் ஒன்று விழுங்கிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கேரள மாநிலம் பாலக்காட்டில் ஒளவாகட் அந்திமத் எனும் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. கேபி கிருஷ்ணதாஸ் என்பவரின் வீட்டில் அவரது மனைவியின்  3 பவுன் தங்கச் சங்கிலி தொலைந்துள்ளது. இதனையடுத்து வீடு முழுவதும் அலசி ஆராய்ந்த அவர்கள் நகை கிடைக்காத விரக்தியில், அவர்கள் வளர்க்கும் செல்லப்பிராணியான டெய்சி என்ற “கோல்டன் ரெட்ரீவர்” ரக குட்டி நாய்,பென்சில் ஒன்றை […]

இந்தியா செய்தி

டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

  • April 19, 2023
  • 0 Comments

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று லக்னோவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் அதிரடியாக ஆடி 38 பந்துகளில் 2 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 72 ரன்கள் விளாசினார். நிகோலஸ் பூரன் […]