சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு முக்கிய தகவல்
சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்புறுதித் திட்டத்தில் மாற்றம் ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுஃ எதிர்வரும் வரும் ஜூலை 1ஆம் திகதி முதற்கொண்டு மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படும் என மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் S-pass, வேலை அனுமதி அட்டை வைத்திருப்போர், வெளிநாட்டுப் பணிப்பெண்கள் ஆகியோருக்குப் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு ஊழியர்களின் மருத்துவச் செலவு அதிகமாக இருக்கும் பட்சத்தில் அந்தத் திட்டம் அவர்களையும் அவர்களது முதலாளிகளையும் பாதுகாக்கும். புதிய வரம்பின்படி, ஆண்டுக்கு 60-ஆயிரம் வெள்ளிவரை செலுத்திய கட்டணத்தைக் […]













