உலகம்

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு சிறை தண்டனை

தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக்-யியோலின் மனைவி கிம் கியுங்-யியோனுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இலஞ்சம் வாங்கியதற்காக அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

2022 முதல் 2025 வரை யூன் சுக்-யியோலின் அதிபர் பதவிக் காலத்தில், முதல் பெண்மணி என்ற தனது பதவியை துஷ்பிரயோகம் செய்ததாகவும், 300 மில்லியன் வோனுக்கும் அதிகமான மதிப்புள்ள பரிசுகளை இலஞ்சமாகப் பெற்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நாட்டில் இராணுவச் சட்டத்தை அறிவிக்க மேற்கொண்ட தோல்வியுற்ற முயற்சிக்கு, முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-யியோலுக்கு கடந்த பிப்ரவரியில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், அவர் பல குற்றச்சாட்டுகளின் பேரிலும் விசாரணைகளை எதிர்கொண்டு வருவதாக வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்