தீவிரவாத மதகுருமாரே ஈரானை ஆள்கின்றனர்- அமெரிக்கா கடும் விசனம்
தீவிரவாத மதகுருமார்களால் ஆட்சி செய்யப்படும் ஒரு நாடே ஈரான் என விமர்சித்துள்ளார் அமெரிக்க ராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ.
நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து அவர்கள் எவ்வித அக்கறையும் இல்லாமல் இருக்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“அவர்கள் தங்களுடைய சொந்த நாட்டையே அழித்து வருகிறார்கள். அவர்கள் நினைத்தால், மத்திய கிழக்கு பிராந்தியத்திலேயே மிகப்ப பணக்கார நாடாக ஈரானை மாற்ற முடியும்.
ஆனால் அதற்கு மாறாக, அவர்கள் தங்களது நாட்டின் பணத்தை எடுத்து ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஹூதிகள் மற்றும் ஷியா ஆயுதக் குழுக்களுக்கு வழங்குகிறார்கள்.
உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்துவதற்காகவே அந்தப் பணத்தைப் பயன்படுத்துகிறார்கள்” – எனவும் அமெரிக்க ராஜாங்க செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “ஈரானை அணுஆயுத அற்ற நாடாக்குவதே அமெரிக்காவின் முதன்மையான நோக்கமாகும். அவர்களால் அணுஆயுதங்களை வைத்திருக்க முடியாது; அவ்வாறு அவர்களிடம் அணுஆயுதம் இருந்தால் உலகிற்கு அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்” என்றும் ரூபியோ எச்சரித்துள்ளார்.




