தமிழ் திரையுலகின் சிம்ம சொப்பனம் பாரதிராஜா காலமானார்!!
இயக்குநர் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாக தனது 84 ஆவது வயதில் இன்று காலமானார்.
சென்னையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1977-ம் ஆண்டு வெளியான ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘முதல் மரியாதை’, ‘கருத்தம்மா’ என பல மண்வாசனை ததும்பும் படங்களை இயக்கியிருந்தார்.
இவருடைய அனைத்து திரைப்படங்களிலும் கிராமத்து மண்வாசனை நிறைந்திருக்கும். இன்று முன்னணி நடிகர்களாக வளம் வரும் பலருக்கு வாழ்வளித்த பெருமை இவருக்கு உண்டு.
அவருடைய மறைவு தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





