இலங்கை செய்தி

செம்மணி விவகாரம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவுக்கமைய நடவடிக்கை: அரசு உறுதி

யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 38 ஆவது நாளான இன்று 08 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு அமையவே அரசாங்கம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது, செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதிக்கு ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு விஜயம் செய்வது குறித்து ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் கூறியவை வருமாறு:

“செம்மணி விவகாரத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே விளக்கமளிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சு, துறைசார் நிபுணர்கள் மற்றும் குழுவினர் இது தொடர்பான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். இது சார்ந்த தகவல்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.

ஐரோப்பிய தூதுக்குழு அங்கு விஜயம் செய்வது குறித்து எனக்குச் சிறப்புத் தகவல் எதுவும் தெரியாது.

இந்த விவகாரம் தொடர்பான தகவல்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வருவதால், நீதிமன்றம் வழங்கும் உத்தரவுகளுக்கு அமையவே அடுத்தகட்ட நடவடிக்கைகள் இடம்பெறும்.”என்றார் அமைச்சர்

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை