ஆசியா செய்தி

பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் – 9 பொலிஸார் பலி!

தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம் சிப்பி நகரில் இன்று பொலிஸார் ஒரு வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வாகனம் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது.

உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த நபர் பொலிஸ் வாகனம் மீது மோதினார். இதில் குண்டு வெடித்ததில் பொலிஸ் வாகனம் நொறுங்கியது. இந்த குண்டு வெடிப்பில் 9 பொலிஸார் பலியானார்கள். 15 பொலிஸார் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர்.

இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. பாகிஸ்தானில் சமீப காலமாக தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் மசூதி ஒன்றிலும் பொலிஸ் தலைமை அலுவலகத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிட்டத்தக்கது. பலுசிஸ்தானில் எரிவாயு மற்றும் கனிம வளங்களை சுரண்டுவதாக குற்றம் சாட்டி போராளிகள் குழு ஒன்று அரசாங்கத்துடன் சண்டையிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி