ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் 49 யூரோ பயண அட்டை – வெளியான முக்கிய தகவல்

ஜெர்மனியில் தற்பொழுது இந்த 49 யூரோ பயண அட்டை தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மே மாதம் முதலாம் திகதியில் இருந்து ஜெர்மனியில் 49 யூரோ பயண அட்டையானது அமுலுக்கு வர இருக்கின்றது.

இந்நிலையில் 49 யூரோ பயண அட்டையை பல்கலைகழக மாணவர்களும் உபயோகிக்க முடியும் என்ற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

49 யுரோ டிக்கட் என்று சொல்லப்படுகின்ற டொஷ்லான் டிக்கட் மே மாதம் முதலாம் திகதியில் இருந்து ஜெர்மனியில் நடைமுறைக்கு வருகின்றது.

இதேவேளையில் பல்கலைகழக மாணவர்கள் ஏற்கனவே செமஸ்டர் டிக்கட் என்று சொல்லப்படுகின்ற ஒரு பயண அட்டையை பாவணையில் வைத்திருக்கின்றார்கள்.

இந்நிலையில் இவர்களுக்கு இந்த 49 யூரோ பயண அட்டையை பயன்படுத்தலாமா? என்ற ஒரு கேள்வி இவ்வளவு காலமும் இருந்தது.

மார்ச் 23 ஆம் திகதி ஜெர்மனியின் மாநில போக்குவரத்து அமைச்சர்கள் ஒன்று கூடிய நிலையில் பல்கலைகழக மாணவர்களும் இந்த 49 யூரோ டிக்கட்டுகளை தற்காலிகமாக  ஜெர்மன் முழுவதும் பாவிக்கலாம் என்று முடிவு ஒன்றை எடுத்து இருக்கின்றார்கள்.

இது தற்காலிகமான முடிவு என்றாலும் வெகுவிரைவில் இது நிரந்தரமான ஒரு முடிவாக மாற்றப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

 

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி