இலங்கை செய்தி

சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பை அடுத்து இலங்கைக்கு 7 பில்லியன் டொலர்கள் கிடைக்கும் வாய்ப்பு

சர்வதேச நாணய நிதியப் பணிப்பாளர்சபையின் அனுமதியை அடுத்து 7 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு இலங்கைக்குக் கிட்டியிருப்பதாகத் தெரிவித்துள்ள இலங்கை மத்திய வங்கி, வெகுவிரைவில் நாட்டின் பொதுக்கடன்களின் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்படுமெனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதியுதவிச் செயற்திட்டத்தின்கீழ் 48 மாதகாலத்தில் சுமார் 2.9 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கான உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி எட்டப்பட்டது.

அதனையடுத்து கடந்த 6 மாதகாலமாக சர்வதேச நாணய நிதியப் பணிப்பாளர் சபையின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், அதன் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவந்தன.

இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட இலங்கைக்கான நிதியுதவிச்செயற்திட்ட ஆவணம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (20) நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அதனை ஆராய்ந்த பணிப்பாளர் சபை, எதிர்வரும் 48 மாதங்களில் இலங்கைக்கு 2.286 பில்லியன் டொலர்களை (சுமார் 3 பில்லியன் டொலர்) வழங்குவதற்கு அனுமதியளித்துள்ளது.

இந்நிலையில் சர்வதேச நாணய நிதியப் பணிப்பாளர்சபையின் அனுமதியை அடுத்து 7 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு இலங்கைக்குக் கிட்டியிருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை