செய்தி வட அமெரிக்கா

கனடாவின் கியூபேக் மாகாணத்தில் 5 நாட்கள் மின்சாரமின்றி தவிக்கும் மக்கள்

கனடாவின் கியூபேக் மாகாணத்தின் சில பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களாக மின்சாரமின்றி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாகாணத்தை தாக்கிய பாரிய பனிப்புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.ஈஸ்டர் பண்டிகைக் காலத்திலும் இந்தப் பகுதி மக்கள் மின்சார வசதியின்றி பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சில பகுதிகளில் எப்பொது மின்சாரம் மீள வழங்கப்பட முடியும் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

சிறுவர்கள், முதியவர்கள், நோயாளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மின்சாரமின்றி பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பனிப்புயல் காரணமாக கனடாவில் சுமார் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மின் பாவனையாளர்களின் மின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டன.இவ்வாறு துண்டிக்கப்பட்ட இணைப்புக்கள் பெருமளவில் மீள வழங்கப்பட்டுள்ளன.எனினும், ஒரு தொகுதி மின்பயனர்களுக்கு இன்னமும் மின்சாரம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

 

dhivyabharathy

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி