இலங்கை செய்தி

இலங்கையில் குறைவடையும் அத்தியாவசிய பொருட்களின் விலை

இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களது மொத்த விலை 10 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளமையினால், இவ்வாறு பொருட்கள் குறைவடைவதாக அத்தியாவசிய இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நாட்களிலும், தொடர்ந்தும் விலை குறைவடையும் என அந்த சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

எந்த பொருட்களிலும், தட்டுப்பாடு இதுவரை ஏற்படவில்லை. பண்டிகைக்காலத்தில் அனைத்து பொருட்களும், தட்டுப்பாடு இன்றி சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

வெங்காயம், பருப்பு, கிழங்கு, சீனி, கோதுமை மா உள்ளிட்ட பொருட்களினதும் மொத்த விலை குறைவடைந்துள்ளது.

எனினும், அதன் நிவாரணத்தை வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களே மக்களுக்கு வழங்க வேண்டும் என அத்தியாவசிய இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை