இலங்கை செய்தி

அதீத போதையால் இளைஞன் உயிரிழப்பு

அதீத போதை காரணமாக யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உரும்பிராய் தெற்கை சேர்ந்த 21வயதான இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இளைஞனின் தாய் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் , தந்தையும் சகோதரியும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.

அந்நிலையில் இளைஞன் பாட்டியுடன் உரும்பிராயில் வசித்து வருகின்றார்.

கடந்த 29ஆம் திகதி அதீத போதையில் வீட்டுக்கு வந்த இளைஞன் நாலைந்து தடவைகள் வாந்தி எடுத்து விட்டு படுத்துள்ளார்.

பாட்டியரும் போதையில் தான் இளைஞன் படுத்துள்ளான் என நினைத்துள்ளார்.

ஆனாலும் நீண்ட நேரமாகியும் இளைஞன் எழும்பாததால் , இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை இளைஞன் உயிரிழந்து சில மணி நேரம் ஆகிவிட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை