ஆப்பிரிக்கா

சூடானில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கர்களை வெளியேற்ற நடவடிக்கை !

சூடானில் வன்முறை வெடித்துள்ள நிலையில், அங்கிருந்து தங்கள் நாட்டு மக்களை வெளியேற்றும் முயற்சியில் ஒவ்வொரு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன.

அந்தவகையில்,  கார்ட்டூமில் இருந்து அமெரிக்க பணியாளர்கள் வெளியேற்றப்படுவதை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் உறுதிப்படுத்தினார்.

ஹெலிகொப்டர்கள் மூலம் அமெரிக்கர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்போது துப்பாக்கிச் சூடு எதுவும் இடம்பெறவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களை வெளியேற்றுவதற்காக  மூன்று MH-47 ஹெலிகாப்டர்களிலும், சுமார் 100 அமெரிக்க துருப்புக்களும் களமிறங்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மீட்பு பணியாளர்கள் சுமார் 70 அமெரிக்க ஊழியர்களை சூடானில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தில் இருந்து விமானம் மூலம் அறியப்படாத இடத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு