ஆசியா

சிங்கப்பூரில் தெய்வ சக்தி இருப்பதாக கூறி மோசடி – பெண்ணுக்கு கிடைத்த தண்டனை

சிங்கப்பூரில்பொதுமக்களை ஏமாற்றிய பெண்ணுக்குப் பத்தரை ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

ஆன்மிகப் பாதையில் இட்டுச்செல்வதாக கூறி பலரை குறித்த பெண் ஏமாற்றியுள்ளார். 54 வயது சிங்கப்பூரர் வூ மே ஹோ மீது 50 குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன.

ஏமாற்றியது, கடுமையான காயத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட 5 குற்றங்களை அவர் ஒப்புக்கொண்டார்.

தண்டனை விதிக்கும்போது மேலும் 45 குற்றச்சாட்டுகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

வூ நன்கொடை தரச்சொல்லிப் பொதுமக்களிடம் இருந்து 7 மில்லியன் வெள்ளியை ஏமாற்றினார் என்று நீதிமன்றத்தில் தெரியவந்தது.

அதோடு அவர் சொல்வதைப் பின்பற்றாதவர்களுக்கு அவர் கடுமையான காயங்களை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டது.

அவர் சொல்வதை நம்பிச் சுமார் 30 பேர் ஏமாந்து பணத்தைக் கொடுத்துத் துன்பத்தை அனுபவித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்