ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவிலிருந்து 4 வருடங்களின் பின் இந்தியா செல்ல முயற்சித்த பெண் விமானத்தில் மரணம்

இந்தியாவின் மெல்போர்னில் இருந்து புதுடெல்லி சென்ற குவாண்டாஸ் விமானத்தில் வெளிநாட்டு மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் படிக்க வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு வந்து நான்கு வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக தனது குடும்பத்தைப் பார்க்க இந்தியா செல்லவிருந்த 24 வயது இளம்பெண் துரதிஷ்டவசமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

விமானத்துக்குள் நுழைந்து பொருத்தமான இருக்கைக்குச் சென்று சீட் பெல்ட்டை இறுக்கியதால் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக இந்த யுவதி உயிரிழந்துள்ளார்.

இவர் ஆஸ்திரேலியாவில் சமையல் கலைஞராகும் நோக்கில் கல்வியில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விமானம் புறப்படுவதற்கு முன்னர் தனது தோழிக்கு சுகயீனம் ஏற்பட்டிருந்த போதும், அதைப் பற்றி சிந்திக்காமல் விமான பயணத்திற்கு தயாராகியுள்ளதாக உயிரிழந்த இந்திய மாணவியின் தோழி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் ஜூன் 20 ஆம் திகதி நடந்துள்ளது, விமானத்தில் அவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டாலும், அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித