Site icon Tamil News

ரஷ்ய வைரங்களுக்கு தடை விதிக்க மேற்கத்திய நாடுகள் முடிவு!

ரஷ்ய வைரங்களுக்கும் தடை விதிக்க மேற்கத்திய நாடுகள் பரிசீலித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

உலகின் ஒட்டுமொத்த வைர உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு ரஷ்யாவில் வெட்டி எடுக்கப்பட்டு, பெல்ஜியம் நாட்டின் ஆன்ட்வெர்ப் நகர தொழிற்சாலைகளில் பட்டை தீட்டப்பட்டு வருகிறது.

வைர ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு சுமார் 33 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை ரஷ்ய அரசு ஈட்டி வருவதால் அதற்கு தடை விதிக்க ஜி-7 நாடுகள் முடிவெடுத்துள்ளன.

தற்போது வாய்மொழி உத்தரவு மட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஆன்ட்வெர்ப் நகர வியாபாரிகள், கனடா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வைரங்களை இறக்குமதி செய்ய தொடங்கியுள்ளனர்.

Exit mobile version