இலங்கை

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தாக்குதல் சம்பவ காணொளி ; பொலிஸ் சார்ஜன்ட் இடைநீக்கம்

சமூக வலைத்தளங்களில் பரவி வரும், ஒருவரைத் தாக்கும் காணொளி தொடர்பாக பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரியொருவர் மற்றும் ஒரு நபருக்கிடையில் சனிக்கிழமை (24) அன்று ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு பிறகு பொலிஸ் அதிகாரியால் குறித்த நபர் தாக்கப்பட்ட காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

கொக்கரெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இப்பாகமுவ – மடகல்லே வீதியில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற ஆண் மற்றும் பெண் ஒருவரை சோதனையிட சென்றபோது ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக கோகரெல்ல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் மாவட்ட 1 பொலிஸ் அதிகாரி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்