அரசியல் இலங்கை செய்தி

வெனிசுலா விவகாரம்: ஐ.நாவிடம் இலங்கை விடுத்துள்ள அவசர கோரிக்கை!

வெனிசுலா மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு அமைதியான தீர்வை நோக்கிச் செயல்படுவது முக்கியம் என்று இலங்கை வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா. சபை, பாதுகாப்பு சபை என்பவற்றிடமே இலங்கை இவ்வாறு வலியுறுத்தியுள்ளது.

வெனிசுலா விவகாரம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு நேற்று விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

வெனிசுலா நிலைவரம் தொடர்பில் இலங்கை அரசு ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளதுடன், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச மோதல்களை அமைதியான முறையில் தீர்த்து வைப்பது மற்றும் நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு போன்ற சர்வதேச சட்டத்தின் கொள்கைகளை மதித்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை இலங்கை வலியுறுத்தியுள்ளது.

“ வெனிசுலா மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு மற்றும் பிராந்தியத்தின் உறுதித்தன்மைக்கு இலங்கை மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது.

பதற்றத்தைக் குறைத்தல் மற்றும் பேச்சுக்கள் மூலம் அமைதியான தீர்வுக்கு முன்னுரிமை அளிக்க அனைத்து தரப்பினரையும் அழைக்கிறது.” எனவும் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை