உலகம்

வெனிசுலா விவகாரம் – அமைதி காக்கும் உலக நாடுகள் : விளக்கம் கோரும் ஐ.நா சபை!

வெனிசுலாவில் அமெரிக்காவின் தலையீடு சர்வதேச சட்டத்திற்கு எதிரானது என்று ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கை  வெனிசுலாவில் நிலைமைகளை மோசமாக்கும் என்றும், சக்திவாய்ந்த நாடுகள் தாங்கள் விரும்பியதைச் செய்ய முடியும் என்றும் ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் அஞ்சுகிறது.

இந்நிலையில் இது தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டும் என  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் உள்ளிட்ட பல தலைவர்கள் ஆதரிக்கும் வகையில் மௌனம் காத்து வருகின்றனர்.

அமெரிக்கா மதுரோவை  கைது செய்ததை அடுத்து, கராகஸில் அமெரிக்க தாக்குதலில் இங்கிலாந்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், ஆனால் டிரம்பிடம் பேசி “முதலில் உண்மைகளை நிறுவ” விரும்புவதாகவும் ஸ்டார்மர் அறிவித்தார்.

உலக தலைவர்களின் இவ்வாறான நடவடிக்கை தொடர்பிலேயே ஐக்கிய நாடுகள் சபை விளக்கம் கோரியுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்