ஐரோப்பா

வத்திக்கானின் தற்காலிக தலைவர் நியமனம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து வத்திக்கானின் தற்காலிக தலைவர் நியமிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அந்த பதவிக்கு அமெரிக்க கர்தினால் கெவின் ஃபாரல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு காரணமாகவே காலமானார் என்று வத்திக்கான் திருச்சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனை வத்திக்கான் மருத்துவர் ஆண்ட்ரியா ஆர்க்காங்கெலி வத்திக்கானால் வெளியிடப்பட்ட இறப்புச் சான்றிதழில் தெரிவித்துள்ளார்.

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 12 ஆண்டுகள் இறைச் சேவையாற்றிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் சென். பீட்டர்ஸ் பெசிலிக்காவிலுள்ள இல்லத்தில் நேற்று (21) காலமானார்.

அவரது நித்திய இளைப்பாறலை வத்திக்கான் திருச்சபை காணொளி அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்திருந்தது.

இதேவேளை பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸிற்கு உலக நாடுகள் அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்