இந்தியா செய்தி

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த அமெரிக்க துணை ஜனாதிபதி

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரின் குடும்பத்தாரை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.

தில்லியில் உள்ள பிரதமர் இல்லத்துக்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்ற வான்ஸை பிரதமர் வரவேற்றார்.

இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் வணிக ஒப்பந்தம் குறித்த விவாதங்கள் அவர்களின் பேச்சுவார்த்தைகளில் முதன்மையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விமான நிலையத்தில், ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரின் குடும்பத்தாரை வரவேற்றார். வான்ஸின் மனைவி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால், குழந்தைகள் இந்திய பாரம்பரிய உடை அணிந்திருந்தனர்.

துணை அதிபருக்கு விமான நிலையத்தில் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. மேலும், பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி