ஐரோப்பா

ரஷ்யாவின் உள்ள எண்ணெய் ஆலை மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல்; மூவர் பேர் பலி!

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் உக்ரைன்-ரஷ்யா போரில் இரு நாடுகளும் மாறிமாறி தாக்குதலில் ஈடுபடுகின்றன. அந்தவகையில் ரஷ்யாவின் ரோவென்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதில் அங்குள்ள ஒரு எண்ணெய் ஆலை தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்குள்ள வீடுகள், வாகனங்கள் போன்றவை சேதமடைந்தன. இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

அந்த எண்ணெய் ஆலையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியும் நடைபெற்றது. எனினும் அங்கு வேலை பார்த்த 3 தொழிலாளர்கள் உடல் கருகி பலியாகினர். மேலும் 8 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்