செய்தி தமிழ்நாடு

விழுப்புரத்தில் பள்ளி மாணவியை கடத்த முயன்ற இரு நபர்கள்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த தையூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வரும் கீழ்பாப்பம்பாடி கிராமத்தை சேர்ந்த ஆதிலட்சுமி என்ற சிறுமி காலை பள்ளிக்கு வந்து கொண்டிருந்த வேளையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் சிறுமியின் கையை பிடித்து இழுத்து உள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அவளிடமிருந்து தப்பிக்க தன்னிடமிருந்த சிலம்பம் கம்பால் தாக்கி கூச்சலிட்டதில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்ததையடுத்து இருசக்கரத்தில் வந்தவர்கள் அவ்விடத்திலிருந்து தப்பியதாக சிறுமி கூறியதின் அடிப்படையிலும் மேலும் இருசக்கர வாகனத்தில் குழந்தை ஒன்று சாக்கு பையில் இருந்ததாக சிறுமி கூறியதின் அடிப்படையில் கிராம மக்கள் செஞ்சி போலிசாருக்கு கொடுத்த தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த செஞ்சி துணை கண்காணிப்பாளர் கவினா,செஞ்சி காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி, பள்ளி மாணவியிடம் நடத்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சிறுமி கொடுத்த தகவல் அடிப்படையில் மாவட்ட கண்காணி கண்காணிப்பாளர் மற்றும் செஞ்சி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு நடந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் சாக்கு பையில் குழந்தையை கடத்தி சென்றதாக கூறிய சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதால் சுற்றுவட்டார கிராமங்களில் பரபரப்பு நிலவியது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி