ஐரோப்பா

இலங்கையில் நபர் ஒருவரின் விபரீத செயல் – ஒருவர் பலி – பொலிஸ் அதிகாரி காயம்

சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டுகொட பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் கார் ஒன்றை சோதனையிட சென்ற நபர் ஒருவர் பொலிஸ் சார்ஜென்ட்டின் துப்பாக்கியை பறிக்க முயற்சித்துள்ளார்.

அதன்போது, ​​ஆயுதம் இயங்கிய நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் காலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

அத்துடன், துப்பாக்கியை கைப்பற்ற முற்பட்ட நபரின் வயிற்றில் சுடப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த இருவரும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் துப்பாக்கியை கைப்பற்ற முயன்ற நபர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்